ஏசியை நாள் முழுவதும் இயக்கினாலும் பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்

கொளுத்தும் கோடையில்  ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. ஆனால், நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்தினாலும் உங்கள் வீட்டின் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில எளிய டிப்ஸ்களைப் பின்பற்றி னால், கவலையில்லாமல் ஏசியை பயன்படுத்தலாம்

1 /5

வீட்டின் அறையில் ஏசியை ஆன் செய்யும் போது, ​​அறை சீலிங் ஃபேனையும் ஆன் செய்ய வேண்டும். ஏசி மற்றும் ஃபேனை ஒன்றாக சேர்த்து இயக்கினால் குளிர்ந்த காற்று அறையின் மூலையை வேகமாக சென்றடைகிறது.

2 /5

ஏசியை ஆன் செய்யும் போது, ​​குறிப்பாக படுக்கைக்கு செல்லும் போது கண்டிப்பாக ஏசி டைமரை அமைக்கவும். இதனால், அறை குளிர்ந்த பிறகு, ஏசி தானாகவே அணைந்து விடும். இதனால் மின்சாரம் அதிகம் சேமிக்கப்படும்.

3 /5

ஏசியில் வெப்பநிலை சென்ங்கிகை 24 டிகிரியில் வைத்திருப்பது மின் சேமிப்பு மற்றும் நல்ல குளிர்ச்சி ஆகிய இரண்டிற்கும் உதவுகிறது.

4 /5

பொதுவாக ஸ்பிளிட் ஏசியில் கசிவு பிரச்னை அதிகமாக இருக்கும். எனினும் எந்த ஏசியாக இருந்தாலும் அதில் கசிவு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது குளிர்ச்சியை குறைக்கும். இதனால் ஏசி கம்பிர்ஸர் தேவைக்கு அதிகமாக் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டு மின் கட்டணத்தையும் அதிகரிக்கிறது.

5 /5

ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். சர்வீஸ் செய்யாமல் நீண்ட காலத்திற்கு ஏசியை இயக்குவது குளிர்ச்சியைக் குறைப்பதோடு, அதிக அளவு மின்சார செலவிற்கு வழி வகுக்கும்.