மூட்டு வலி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் மக்கானா..!!

மக்கானா அல்லது தாமரை விதை உலர் பழங்கள் வகையை சேர்ந்தது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நம்மை வியக்க வைக்கும்.

தாமரை விதையில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளால், இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

1 /6

மக்கானா என்னும் தாமரை விதை, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை இதில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

2 /6

ஆக்சிஜனேற்ற பண்புகள் கொண்ட மக்கானாவில், கால்சியம், நார்ச்சத்து, புரதம் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

3 /6

மக்கானாவில் மிகக் குறைந்த கலோரி உடன், கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

4 /6

மக்கானாவில் மிகக் குறைந்த அளவில் கிளைம் செமி குறியீடு எண் உள்ளதால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. இது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டும் உள்ளன

5 /6

மக்கானாவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுவதால், எலும்புகளை வலுப்படுத்தும். மூட்டு வலி, பற்கள் பலவீனமடைதல் போன்ற நிலைமைகளை சரிசெய்ய மக்கா நவை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.