French Open 2022: அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்த்த ரஃபேல் நடால்

பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிப் போட்டியின் புகைப்படத்தொகுப்பு...

13 முறை சாம்பியனான ரஃபேல் நடாலை எதிர்த்த ஜெர்மனியின் மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

1 /5

"மிகவும் வருத்தமாக இருக்கிறது, அவர் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார், அவர் மிகவும் நல்ல சக வீரர்" என்று நடால் கூறினார். "கிராண்ட்ஸ்லாம் வெல்வதற்கு அவர் எவ்வளவு போராடுகிறார் என்பது எனக்குத் தெரியும்" என்றும் நடால் தெரிவித்தார்

2 /5

13 முறை ரோலண்ட் கரோஸ் சாம்பியனான ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டருக்கு இரண்டாவது செட்டின் 12வது ஆட்டத்தின் இறுதிப் புள்ளியில் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. 

3 /5

காயமடையும்போது, அலெக்ஸாண்டர், 7-6(8) 6-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

4 /5

மைதானத்திற்கு வெளியே பல நிமிடங்கள் வலியால் துடித்த அவர், ஆட்டத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்  

5 /5

இரண்டாவது செட்டின் 12வது ஆட்டத்தில் ஒரு ஷாட்டை மீட்டெடுக்க முயன்றபோது ஸ்வெரெவ் காலைத் திருப்பினார். அப்போது அவரது கணுக்காலில் அடிபட்டது. உடனே வலியால் துடித்த அவர் வீல்சேரில் அழைத்து செல்லப்பட்டார்.