மூட்டு வலி முதல் உடல் பருமன் வரை... வெல்லம் ஏற்படுத்தும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

வெல்லம் பொதுவாக  அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சர்க்கரையை விட வெல்லமே சிறந்தது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.

வெல்லம் பொதுவாக  அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சர்க்கரையை விட வெல்லமே சிறந்தது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.

 

1 /9

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதோடு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. 

2 /9

உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது வெல்லம். அதனால்தான் உணவு   உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.  

3 /9

சர்க்கரை எடையை அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில், வெல்லத்தை உட்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் எடை கட்டுக்குள் இருக்கும்.

4 /9

வெல்லத்தில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இதனால் மூட்டு வலி பிரச்சனை நீங்கும்.  இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். வெல்லம் தசைகளின் வலிமைக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

5 /9

இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது பெரிதும் நன்மை பயக்கும். வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் காரணமாக இரத்தம் ஓட்டம் சீராகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

6 /9

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும்  அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

7 /9

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உடலில் ரத்தம் சோகை ஏற்படாது. இரத்த சோகை போன்ற நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும். பலவீனமான உடலை வலிமையாக்கும்.

8 /9

வெல்லம் சாப்பிடுவதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெல்லத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.