துருக்கியின் பண்டைய நகரமான ஹீரபோலிஸில், மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் 'நரகத்தின் நுழைவாயில்' என அழைக்கப்படுகிறஅதற்குள் அருகில் சென்ற ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை என கூறப்படுகிறது.
மர்மமான இந்த கோயிலுக்குள் செல்லும் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகள் கூட இறக்கின்றன என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த இடம் மர்மமாகவே இருந்தது, இங்கு வந்தவர்கள் கிரேக்க கடவுளின் விஷ காற்றின் சுவாசத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பினர்.
இங்கு தொடர்ந்து இறப்பு நடப்பதால், மக்கள் இந்த கோவிலின் கதவை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள். கிரேக்க, ரோமானிய காலங்களில் கூட, மரண பயம் காரணமாக இங்கு செல்ல மக்கள் பயந்தார்கள் என கூறப்படுகிறது.
இந்த மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுவது வேறு விதமாக உள்ளது. கோயிலுக்கு அடியில் இருந்து விஷ கார்பன் டை ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இதன் காரணமாக மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் இந்த கோவிலுக்கு செல்வதால் இறக்கின்றனர் எனக் கூறுகிறார்கள்.
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், கோயிலின் கீழ் கட்டப்பட்ட குகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10% கார்பன் டை ஆக்சைடு இருந்தாலே ஒரு நபர் வெறும் 30 நிமிடங்களில் இறக்கலாம். இங்குள்ள குகைக்குள் இருக்கும் இந்த விஷ வாயுவின் அளவு 91% என்பதால் இறப்பு நேரிடுகிறது என்கின்றனர்.
குகையிலிருந்து வெளியே வரும் புகையினால், இங்கு வரும் பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுகின்றன.