இந்த மாதத்திலிருந்து சம்பளம் அதிகரித்தாலும்கூட, முன்பு பெற்றதை விட குறைந்த சம்பளத்தைப் பெற தயாராகுங்கள். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ஊதிய மசோதாவினால், பிடித்தங்கள் போக கைக்கு கிடைக்கும் சம்பளத்தின் தொகை இனி குறையும். ஊதியங்களின் புதிய வரையறைக்கு ஏற்ப பணியாளர் இழப்பீடுகளை முதலாளிகள் மாற்ற வேண்டியிருக்கும்.
2021 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய ஊதிய மசோதாவை மத்திய அரசு அமலுக்கு கொண்டுவருகிறது. இது நிறுவனம், ஊழியர் ஒருவருக்காக செலவழிக்கும் மொத்த தொகை (cost to the company (CTC)) மற்றும் முதலாளிகளின் ஊதிய கொடுப்பனவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதிய மசோதா 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஊதியங்களின் புதிய வரையறைக்கு ஏற்ப பணியாளர் இழப்பீடுகளை முதலாளிகள் மாற்ற வேண்டும். ஓய்வூதியத்திற்கு பிந்தைய சலுகைகளை உட்பட பல மாற்றங்கள் ஏற்படும். அதே நேரத்தில் பிடித்தங்கள் போக கைக்கு வரும் சம்பளத் தொகையில் சரிவு ஏற்படும். வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் கிராச்சுட்டி பங்களிப்புகள் அதிகரிக்கும்.
Also Read | Cricket Brothers: பாண்ட்யா, பதான் என ODIகளில் ஒன்றாக விளையாடிய சகோதரர்கள்
ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் ஓய்வூதியத்திற்கு பிந்தைய சலுகைகளை உள்ளடக்கும், பிடித்தங்கள் போக கைக்கு வரும் தொகையிலும் குறைவு ஏற்படும். வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மற்றும் கிராச்சுட்டி பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
புதிய சம்பள மசோதா அமல்படுத்தப்படும்போது அடிப்படை ஊதியம், (பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட) அகவிலைப்படி, தக்கவைப்பு கட்டணம் ஆகிய மூன்று கூறுகளில் மாற்றங்கள் ஏற்படும். இது ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். போனஸ், ஓய்வூதியம் மற்றும் பிஎஃப் பங்களிப்புகள், அகவிலைப்படி, வீட்டு சலுகைகள், கூடுதல் நேரம், கிராச்சுட்டி, கமிஷன், என பல பிரிவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
புதிய ஊதியக் குறியீட்டின்படி, கிராச்சுட்டி சில மாற்றங்களுக்கும் உட்படும். அடிப்படை ஊதியம் மற்றும் பயணம், சிறப்பு கொடுப்பனவு போன்ற ஊதியங்களின் பிற கொடுப்பனவுகள் உட்பட ஒரு பெரிய தளத்தின் அடிப்படையில் கிராச்சுட்டி கணக்கிடப்பட வேண்டும். இது நிறுவனங்களின் கிராவிட்டி செலவை அதிகரிக்கும்.
புதிய ஊதிய சட்டம் அமலாகும்போது, ஊழியர்களின் அடிப்படை ஊதியம், சி.டி.சி-யில் 50% ஆக இருக்க வேண்டும். விடுப்பு பயணம், வீட்டு வாடகை, கூடுதல் நேரம் போன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், மீதமுள்ள 50% சி.டி.சி.க்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த விலக்குகளில் ஏதேனும் ஒன்று, மொத்தத்தில், சி.டி.சி-யில் 50% ஐத் தாண்டினால், கூடுதல் தொகை ஊதியமாகக் கருதப்பட்டு ஊதியத்தில் சேர்க்கப்படும்.
புதிய ஊதியக் குறியீடு மசோதா 2021, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதியக் குறியீடு மசோதா 2021 இன் படி, ஒரு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் நிகர சி.டி.சியில் 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளமும் பாதிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் குறையும். அதாவது பிடித்தங்கள் போக கைக்கு வரும் சம்பளம் ஏப்ரல் மாதத்திலிருந்து குறையலாம். ஊதியக் குறியீடு கிராச்சுட்டி கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கும் அவர்களின் ஓய்வூதிய கார்பஸுக்கு முதலாளிகளின் பங்களிப்புக்கும் வழிவகுக்கும். பல தனியார் நிறுவனங்கள் கொடுப்பனவு கூறுகளை அதிகமாகவும், அடிப்படை சம்பளத்தை குறைவாகவும் வைக்க விரும்புகின்றன. புதிய விதிகளின் கீழ் இது அனுமதிக்கப்படமாட்டாது.