Diabetes Control: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் சில ‘மேஜிக்’ மசாலாக்கள்..!!

Kitchen Masalas To Control Diabetes: மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதில் ஒன்று நீரிழிவு நோய். தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது பலனளிக்கும்.

1 /9

நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லை என்றால், இதய நோய் முதல் சிறுநீரக் பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு என பல விதமான உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இந்நிலையில், சுகர் லெவலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் மசாலாக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /9

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தைத் தவிர்க்கலாம். நீங்கள் டீ மற்றும் கஞ்சி உணவுகளில் இலவங்கப்பட்டை பயன்படுத்தலாம். பட்டையை கொதிக்க வைத்து அதன் நீரையும் அருந்தலாம்.  

3 /9

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வெந்தயம் சிறந்த முறையில் வேலை செய்கின்றன. இதனை இரவில் ஊற வைத்து, காலையில் தண்ணீர் உடன் குடிக்கலாம்.வெந்தயம் போட்டு கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம். சர்க்கரை நோயாளிகள் இதன் மூலம் பலன் பெறுவார்கள்.

4 /9

மஞ்சளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மிகவும் நன்மை பயக்கும். தரமான மஞ்சளை அரைத்து வைத்துக் கொண்டு காலையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இரவில் பாலில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.

5 /9

சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு நன்மை பயக்கும். கிராம்பு டீ தயாரித்து குடிப்பது பலன் தரும். இது இன்சுலின் உற்பத்தியை இயற்கையாக அதிகரித்து நன்மைகளை கொடுக்கிறது.

6 /9

கருமிளகில் உள்ள பைபரின் கலவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. கருமிளகை கறி, சூப், சாலட் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். இதனை நீங்கள் நேரடியாக மென்று சாப்பிடலாம் அல்லது தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

7 /9

இஞ்சி இன்சுலின் அளவை சீராக்க்கி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் பெற்றது. இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீஷியம், நார்ச்சத்து ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.  

8 /9

பிரிஞ்சி இலை உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டது. இதனால் இன்சுலின் அளவு சீராகி, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.