வெயிலில் வெளியில் விளையாடும் குழந்தைகள் சந்திக்கும் பெரிய பிரச்சனை நீரிழப்பு. அதனை சமாளிக்க இந்தப் பழங்களை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
தர்பூசணிப் பழங்கள் 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்டவை. வெயில் உரியும் நீரின் அளவை உடனடியாக உடலுக்கு அளிக்கக்கூடியது.
நார்ச்சத்து, விட்டமின் பி, பாஸ்பரஸ் என்று பல சத்துக்களை கொண்டது ஆப்பிள். சும்மாவா சொன்னாங்க? An Apple a day keeps Doctor away.
உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தாதுக்கள் அதிகம் கொண்டது பப்பாளி. முகத்தில் தடவினால் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெயில் உடலின் ஆற்றலை உரியக் கூடியது. அதனை தன்னுடைய மாவுச்சத்துகள் மூலம் உடனடியாக உடலுக்கு மீண்டும் வழங்கும் வாழைப் பழம்.
வெயிலுக்கு வெளியே போயிட்டு வந்தாலே எலுமிச்சை சாறு குடிக்கலாம்னு தோணும். அதுக்கு முக்கிய காரணம் அதுல இருக்கற விட்டமின் சி. சாத்துக்குடி, ஆரஞ்சு கூட எடுத்துக்கலாம்.
அதிகமான நீர்ச்சத்துக்கள் கொண்டது மாம்பழம். ஆனால் சூட்டை கிளப்பும் தன்மை கொண்டதால் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.