GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..

GOAT Director Venkat Prabhu Shares Actor Vijay Photo : விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் விஜய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

GOAT Director Venkat Prabhu Shares Actor Vijay Photo : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது The Greatest Of All Time (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. வெளிநாடுகளில் நடைப்பெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கிள் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் விஜய், இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ‘விசில் போடு’ பாடல், ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் 50 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யின் BTS புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

1 /8

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், கோட். 

2 /8

கோட் திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது.

3 /8

கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

4 /8

கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றதை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டிலும் நடைப்பெற்று வருகிறது. 

5 /8

கோட் படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படம், ஹாலிவுட் திரைப்படமான ‘ஜெமினி மேன்’ படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

6 /8

சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. இதில் வெங்கட் பிரபுவின் முந்தைய படத்தின் ரெஃபரன்ஸ்களும் இடம் பெற்றிருந்தன. 

7 /8

கோட் படத்தின், படப்பிடிப்புதள புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். 

8 /8

கோட் படத்தின் படப்பிடிப்பில், வெங்கட் பிரபுவுடன் அமர்ந்து பேசும் விஜய்யின் புகைப்படம்.