அள்ளிக்கொடுப்பார் குரு பகவான்: குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

Guru Peyarchi: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ளார். அவர் மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதற்குப் பிறகு, அவர் மே 6 ஆம் தேதி அஸ்தமனமாவார். அதன் பின்னரும் இந்த ஆண்டில் அவர் பல முறை தன் நிலையில் மாற்றம் கொள்வார்.

Guru Peyarchi: மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்களும் சுப விளைவுகளும் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

ஜோதிட சாஸ்திரத்தில் குருவிற்கு தேவர்களின் குரு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர் நல்ல பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். திருமண மகிழ்ச்சி, குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், அறிவு, கல்வி, பேச்சாற்றல், மரியாதை, நல்லொழுக்கம், ஆகியவற்றுக்கு இவர் காரணியாக உள்ளார்.   

2 /10

குரு தற்போது மேஷ ராசியில் உள்ளார். அவர் மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே 6 ஆம் தேதி அவர் அஸ்தமனமாவார். பின்னர் ஜூன் 12 ஆம் தேதி குரு ரோகிணி நட்சத்திரத்திற்கு மாறுவார். இதற்குப் பிறகு, அக்டோபர் 9 ஆம் தேதி, குரு வக்ர பெயர்ச்சி அடைவார். அடுத்த ஆண்டு 2025 வரை அவர் வக்ர நிலையிலேயே இருப்பார். 

3 /10

மே மாதம் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுவது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. ஜோதிட ரீதியாக இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 

4 /10

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குருவின் இந்த மாற்றம் பல வித நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பல விஷயங்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு வெற்றிகரமாக நடந்து முடியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

5 /10

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியின் பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் வலுப்பெறும், நிதி நன்மைகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள், மேலும் முதலீட்டின் மூலம் பயனடைவீர்கள். உங்கள் பொருள் வசதிகள் அதிகரிக்கும், பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். 

6 /10

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களின் தொழில் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

7 /10

குருவின் ராசி மாற்றம் சிறப்பான சுப பலன்களைத் தரும். 2024 ஆம் ஆண்டு வேலை செய்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். மேலும் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். அதே நேரத்தில், வணிகர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மேலும் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில் தோல்வியடைவார்கள். ஆராய்ச்சியில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு மிகவும் சிறப்பான காலமாக அமையப் போகிறது.   

8 /10

கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இதனுடன், நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். நிலம், வாகனம் வாங்க நினைத்தால் 2024-ம் ஆண்டு உங்கள் விருப்பம் நிறைவேறும். குருவின் தாக்கத்தால் 2024-ம் ஆண்டு உங்கள் திட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இந்த வருடம் அதாவது 2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. 

9 /10

குரு பகவானின் அருள் பெற வியாழக்கிழமைகளில் இந்தா ஸ்லோகத்தை கூறலாம்: 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர, குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'

10 /10

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.