மருதாணியை இந்த முறையில் முடிக்கு தடவினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்!

மருதாணி முடி பராமரிப்பிற்கு அதிகம் உதவுகிறது. இவற்றை தினசரி முடிக்கு பயன்படுத்தி வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

மருதாணி பல ஆண்டுகளாக விசேஷ நாட்களில் பயன்படுகிறது. திருமணம் தொடங்கி, சடங்கு வரை மருதாணி விசேஷ வீடுகளில் முக்கியமாக இருந்து வருகிறது.  

2 /6

மருதாணி மயிர்க்கால் மற்றும் உச்சந்தலையில் ஆழமான கண்டிஷனிங் செய்து பலப்படுத்துகிறது. மேலும் தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.   

3 /6

மருதாணி முடியில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது. மேலும் உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க மருதாணி உதவுகிறது.   

4 /6

மருதாணி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மருதாணியை முட்டை, தயிர் போன்ற மற்ற பொருட்களுடன் சேர்ந்து தலைக்கு தடவலாம்.   

5 /6

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் மருதாணி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.  

6 /6

மருதாணியை தனியாகப் பயன்படுத்தினாலும், மற்ற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் தலைமுடிக்கு அதிக நன்மைகளை தருகிறது.