தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.
தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமான மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சில உணவுப் பொருட்களுடன் தயிர் சேர்க்கக் கூடாது என்பது பலருக்குத் தெரியாது.
தயிருடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடுவதால் சருமத்தை பாதிக்கலாம்.
தயிருடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய பொருட்களின் பட்டியலில் மாம்பழம் முதலிடத்தில் இருக்கிறது. மாம்பழம் மற்றும் தயிர் இணைந்தால் உடலில் நச்சுகளை உற்பத்தி செய்யும்
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் தயிர், உலகின்ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது
மீன் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிட வேண்டாம் மீனுடன் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இரண்டு உணவுகளிலும் புரதம் அதிகம். இரண்டு புரோட்டீன் நிறைந்த பொருட்களை ஒன்றாக இணைக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சைவ புரத மூலத்துடன், விலங்கு மூலத்தை இணைத்துக்கொள்ளலாம், ஆனால் அதை ஒருபோதும் மற்றொரு சைவ மூலத்துடன் இணைக்கக்கூடாது. இது அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பாலுடன் தயிர் சேர்க்க வேண்டாம் பாலில் இருந்து தயிர் உருவானாலும் பாலுடன் தயிரை ஒன்றாக சாப்பிடக்கூடாது. இது வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.
உளுத்தம்பருப்பை தயிருடன் சேர்த்து உட்கொள்வது செரிமான அமைப்பை சீர்குலைக்கும். இது அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
தயிருடன் இணைந்த எண்ணெய் உணவுகள் செரிமானத்தை மந்தமாக்கும். நாள் முழுவதும் உங்களை சோம்பேறித்தனமாக உணர வைக்கும்.