தினமும் உங்கள் உணவில் நார்சத்து அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கின்றது. இது குடல் பாக்டீரியாக்களுக்கு ப்ரீபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.
பார்லியில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, உடலின் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது,
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது, குறிப்பாக இதில் உள்ள ராஃபினோஸ் எனும் கரையக்கூடிய நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.
'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் மருத்துவரிடம் சொல்லவேண்டியதில்லை' என்னும் பழமொழிக்கேற்ப இதில் அதிக சத்துக்கள் உள்ளது, ஆப்பிள்களில் உள்ள ஃபைபர் பெக்டினின் என்கிற நிறமி சர்க்கரை நோய்க்கு மாமருந்தாக அமைகிறது.
அதிக நார்ச்சத்து கொண்ட சப்ஜா விதைகள் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றுவதைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. மேலும் இது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூப்பர்ஃபுட் ஆக உள்ளது.