இன்றைய வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்களில் ஒன்று கொலஸ்ட்ரால். அதிக அளவு கொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பு, இதய நோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய்களின் ஆபத்தை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சில உணவுகள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அத்தியாவசியமானது தான். ஏனெனில், செல்களை உருவாக்கி, ஹார்மோன்களை உற்பத்தி செய்து, செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனினும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால், தமனிகளில் குவிந்து பிளேக் உருவாகும். இந்த பிளேக்குகள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். சில உணவுகள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
பூண்டில் அல்லிசின் போன்ற சேர்மங்கள் உள்ளதால், இதி கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அவை எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
நாவல் பழத்தில் அந்தோசயினின்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து (பீட்டா-குளுக்கன்) உள்ளது. ஓட்ஸின் வழக்கமான நுகர்வு எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும்.
உலர் பழங்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் (மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்), நார்ச்சத்து எல்டிஎல் கொழுப்பை எரிக்கிறது.
பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளில் இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பை அகற்றும் ஆற்றல் உள்ளது.