Hibiscus Tea: மனசோர்வு, மன அழுத்தத்தை ஓட விரட்டும் செம்பருத்தி டீ

பலவகையான தேநீர் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கிரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ என்ன பல வகையான தேநீரை நீங்கள் அருந்திருக்க கூடும். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் செம்பருத்தி டீ பற்றி தெரியுமா...

செம்பருத்தி டீ, பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதோடு, மன அழுத்தத்தை போக்குவது முதல் உடல் பருமனை குறைப்பது வரை பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

1 /7

செம்பருத்தி கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், ஆக்சிஜனேற்ற பண்புகள் உட்பட பல மருத்துவ குணங்கள் அடங்கிய செம்பருத்தி டீ, கலோரி மற்றும் காஃபின் இல்லாத, மிகச்சிறந்த மூலிகை டீ என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2 /7

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த செம்பருத்தி டீ, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

3 /7

மூலிகை தேநீரான செம்பருத்தி டீ, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, பூஞ்சை தொற்று மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

4 /7

செம்பருத்தி டீ, உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை வழக்கமாக அருந்துவதால், பிபி கட்டுக்குள் இருக்கும்.

5 /7

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு, செம்பருத்தி டீ மிகவும் உதவும். ஏனென்றால் இது கலோரி மிகவும் குறைந்த மூலிகை டீயாகும்.

6 /7

செம்பருத்தி டீ அருந்துவதால், முடி உதிர்வு பிரச்சினை குறைவதோடு மட்டுமல்லாமல், கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.