யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்ட 5 ரூபாய் வீட்டு வைத்தியங்கள்

High Uric Acid: உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, விரல்களின் மூட்டுகளில் வலி அதிகரிக்கலாம். இதனால், வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த யூரிக் அமிலம் படிகங்களாக மாறி விரல்களின் மூட்டுகளில் சிக்கி, கடுமையான வலியை உண்டாக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உடலில் இருந்து ஹை யூரிக் அமிலத்தை அகற்ற சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம். எனவே இந்த கட்டுரையில், யூரிக் அமிலத்தை குறைக்கக்கூடிய மலிவான வீட்டு வைத்தியங்களை பற்றி காண்போம்.

1 /8

ஆப்பிள்: ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பழமாகும். ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை செயலற்றதாக்கி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. ஆப்பிளை தினமும் தவறாமல் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுவதோடு கீல்வாத பிரச்சனையையும் குறைக்கிறது.

2 /8

சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது. இவை யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். மேலும், இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கும்.

3 /8

கடுக்காய்: உடலில் தேங்கியிருக்கும் நச்சுகள் மற்றும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் கடுக்காயில் நச்சு நீக்கும் கூறுகள் காணப்படுகின்றன. கடுக்காய் சாப்பிடுவது செரிமானத்திற்கும் நல்லது. இது யூரிக் அமிலத்தை எளிதில் நீக்குகிறது மற்றும் கீல்வாத பிரச்சனையையும் குணப்படுத்தும்.  

4 /8

கிலோய்: அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கிலோய் யூரிக் அமில அளவை அதிகரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை உடலில் இருந்து நச்சுகள் மற்றும் யூரிக் அமிலம் எளிதில் அகற்ற உதவும்.  

5 /8

வேம்பு: யூரிக் அமில படிகங்களை அகற்றவும் வேம்பு உதவுகிறது. வீக்கத்தைக் குறைத்து, யூரிக் அமில பிரச்சனையை நீக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வேப்பில் காணப்படுகின்றன. வேம்பின் பண்புகள் உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகின்றன.  

6 /8

கொத்தமல்லி: கொத்தமல்லி உடலில் இருந்து யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகிறது. கொத்தமல்லி யூரிக் அமிலத்தை சிறுநீருடன் நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்திருப்பவர்கள் கொத்தமல்லி டீ அல்லது தண்ணீர் குடிக்கலாம்.  

7 /8

நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.