முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இல்லமான மும்பையில் உள்ள 'ஆண்டிலியா' பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முகேஷ் மற்றும் நிதா அம்பானி வாழ்ந்து வரும் மும்பையில் உள்ள 'ஆண்டிலியா' வீட்டின் கட்டிடக்கலை ஆனது தாமரை மற்றும் சூரியனால் ஈர்க்கப்பட்டது. இந்த வீட்டை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 4 வருடம் ஆனது.
உலகில் உள்ள பல புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் இந்த வீட்டின் கட்டுமானத்தில் ஈடுபட்டனர். ஆண்டிலியா என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு புராண தீவாக இருந்த 'ஆண்டிலியா' என்ற பாண்டம் தீவில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த வீட்டில் பல்வேறு வகையான செடிகள் மற்றும் மரங்கள் கொண்ட பெரிய தொங்கும் தோட்டம் பராமரிப்பில் உள்ளது. ஆனால் இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
உலகின் மிக உயரமான கட்டிடம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின் தான். ஆனால் அதன் கட்டுமானச் செலவை விட (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அம்பானியின் வீடு (2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டிடச் செலவு அதிகம்.
கிட்டத்தட்ட 4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த வீடு, பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
மொத்தம் 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி சுத்தம் செய்வது உட்பட பராமரித்து வருகின்றனர்.
இந்த வீட்டில் பார்க்கிங்கிற்கு மட்டும் ஆறு தளங்கள் உள்ளது. மேலும் 3 ஹெலிபேடுகள், நீச்சல் குளங்கள், சூப்பர்-பாஸ்ட் லிஃப்ட் போன்ற வசதிகளுடன் உள்ளன.