Honda கார்களில் பம்பர் சலுகை: ரூ. 53,000 வரையிலான நன்மைகள்

பண்டிகைக் காலத்தில் நீங்கள் ஒரு காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருகிறது. ஹோண்டாவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களில் அட்டகாச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழாக்காலத்தை மனதில் வைத்து, நிறுவனம் அதன் நான்கு மாடல்களான Jazz, City, WR-V, Amaze ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக 53 ஆயிரம் ரூபாய் வரையிலான நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /5

ஹோண்டாவின் காரான நியூ ஹோண்டா ஜாஸில், நீங்கள் ரூ .45,996 வரையிலான பெரிய நன்மைகளைப் பெறலாம். ரூ .15,000 வரை ரொக்க தள்ளுபடி, கார் பரிமாற்ற போனஸ் ரூ .10 ஆயிரம் உட்பட பல நன்மைகள் இதில் உள்ளன. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

2 /5

பிரபலமான செடான் கார் ஹோண்டா சிட்டி - 4த் ஜெனரேஷனில் 22 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், கார்ப்பரேட் தள்ளுபடி 8 ஆயிரம், ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் 5 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் உள்ளன. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

3 /5

இந்த எஸ்யூவியில், நீங்கள் ரூ. 40,158 வரையிலான பயனைப் பெறுகிறீர்கள். ரூ .10,000 வரை ரொக்க தள்ளுபடி, கார் பரிமாற்றத்தில் ரூ. 10,000, ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ .5,000 மற்றும் பிற சலுகைகளை இதில் பெறலாம். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

4 /5

ஹோண்டா கார்களின் மிகவும் பிரபலமான நடுத்தர அளவிலான செடான் All New Honda City - 5th Generation-ல் அதிக அளவிலான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த காரை வாங்குவதன் மூலம், நீங்கள் 53,505 ரூபாய் லாபம் பெறுவீர்கள். இதில், ரூ. 20,000 ரொக்க தள்ளுபடி, கார் பரிமாற்ற போனஸ் ரூ .10,000, ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ .5,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ .8,000 உட்பட இதர சலுகைகளும் கிடைக்கும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

5 /5

ஹோண்டா கார்களின் நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா அமேஸில், நீங்கள் ரூ .18,000 வரை நன்மைகளைப் பெறலாம். இதில், ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸாக ரூ .5000 கிடைக்கும். ஹோண்டா கார் பரிமாற்றமாக ரூ .9,000 மற்றும் பெருநிறுவன தள்ளுபடியாக ரூ .4,000 கிடைக்கும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)