படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!

How To Be Intelligent Easy Tips To Be Smart : நம்மில் பலர், படிப்பு சரியாக வரவில்லை என்பதற்காக நம்மை புத்திசாலி இல்லை என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. படிப்பு சரியாக வரவில்லை என்றாலும் நாம் வாழ்வில் ஸ்மார்ட் ஆக இருக்கலாம். எப்படி தெரியுமா?

How To Be Intelligent Easy Tips To Be Smart : படிப்பு வராத குழந்தைகளை பெற்றோர் பலர் “மக்கு” என திட்டுவதை பார்த்திருப்போம், அது போன்ற திட்டை நாமே கூட வாங்கியிருப்போம். இது போன்ற திட்டுகளை வாங்கும் குழந்தைகள், வளர்ந்த பின்பும் தன்னை முட்டாள் என்றே நினைத்து கொண்டிருக்கின்றனர். உண்மையில், படிப்பு என்பது நமக்கு ஓரளவிற்கான அறிவை மட்டுமே புகட்டும். வாழ்க்கைதான் பிற பாடங்களை கற்றுத்தரும். எனவே, படிப்பில் சுட்டியாக இல்லை என்றாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

1 /8

உணர்ச்சி அறிவு: உங்கள் உணர்ச்சிகள் குறித்த அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இதனால் நீங்கள் மனிதர்களை படித்து அதன்படி நடந்து கொள்ள முடியும். இது, உறவுகளில் முக்கியமான முடிவுகளை எடுக்க உங்களுக்கு பயன்படும்.

2 /8

செயல்திறன் படிப்பு: வாழ்க்கையில் நாம் பிராக்டிகலாக சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சமையல் செய்வது, நிதி மேலான்மை உள்ளிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

3 /8

ஆர்வம்: கற்றுக்கொள்ளும் ஆர்வம் நின்று விடவே கூடாது. புத்தகம் படித்தல், பலதரப்பட்ட மக்களுடன் பேசுதல் போன்ற விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

4 /8

தொடர்பு: வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் 80% தீர்மானித்தாலும், நம்மை சுற்றி இருக்கும் நபர்களும் தீர்மானிப்பர். எனவே, உங்களுக்கு பயன் தரும் நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

5 /8

விமர்சன சிந்தனை: வாழ்வில் எப்போதும், விமர்சன சிந்தனை கொண்ட ஆளாக நீங்கள் இருக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

6 /8

நிலையறிதல்: மனதை, அனைத்திற்கும் திறம்பட தயார் படுத்த நமக்குள் நாமே பேசி, நம் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். இது, கடினமான சூழல்களை கடக்க உதவும். 

7 /8

இலக்குகள்: இலக்குகள் அற்ற பாதையில் என்றும் செல்லவே கூடாது. வாழ்வில் எதையாவது சாதிக்க விரும்பினால் அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 

8 /8

எழுந்து கொள்ளும் திறன்: வாழ்வில் அனைவருக்குமே தோல்வி வரும், கடினமான தருணங்கள் வரும். அந்த சமயங்களில், நாம் இன்னும் வலிமையுடன் எப்படி எழுந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.