PPF: தினமும் வெறும் ரூ.405 சேமித்து எளிதில் கோடீஸ்வரராவது எப்படி?

Public Provident Fund: மனித வாழ்க்கைக்கு பணம் அவசியம். அனைவரும் விரைவாக அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். வேகமாக கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். 

 

Public Provident Fund: அதிக பணம் ஈட்ட பலர் தங்கள் அலுவலக பணிகள் மற்றும் வணிக வரவுகளை மட்டும் நம்பாமல், முதலீடுகளிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கின்றது. பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களை தேடும் நபர்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் PPF திட்டம் (பொது வருங்கால வைப்பு நிதி) சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் முதிர்வுக்குப் பிறகு ரூ. 1 கோடியை பெறும் வழியை பற்றி இங்கே காணலாம். 

1 /9

அதிக அளவிலான மக்கள் பொது வருங்கால வைப்பு நிதி  (Public Provident Fund) அதாவது PPF -இல் முதலீடு செய்கிறார்கள். அரசாங்கத்தின் உத்தரவாதம் இந்த திட்டத்தில் இருப்பதே இதற்கு பெரிய காரணமாக உள்ளது. இதில் நமது பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வருமானமும் கிடைக்கின்றது. 

2 /9

இந்த திட்டத்தில் எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் அதிக வட்டியும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.405 முதலீடு செய்தால், முதிர்வுக்குப் பிறகு ரூ.1 கோடியைப் பெறலாம்.

3 /9

PPF திட்டம் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நிரந்தர வைப்புகளை (FD) விட அதிக வட்டியை வழங்குகிறது. தற்போது இந்த திட்டத்தில் 7.1 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது. அரசால் இத்திட்டத்திற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டின் கடைசி மாதத்திலும், அதாவது மார்ச் மாதத்தில் முதலீட்டாளரின் PPF கணக்கில் வட்டி செலுத்தப்படுகிறது.  

4 /9

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என PPF இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் நிதியாண்டு முழுவதும் முதலீடு செய்யவில்லை என்றால், பிபிஎஃப் கணக்கு முடக்கப்படும். கணக்கை மீண்டும் திறக்க, முதலீட்டாளர் முதலீட்டுத் தொகையுடன் அபராதம் செலுத்த வேண்டும்.

5 /9

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது முற்றிலும் வரியில்லா திட்டமாகும். இதில், முதலீட்டுத் தொகை, வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகைக்கு வரி விதிக்கப்படாது. இது தவிர, வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் இந்த திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும்.

6 /9

இந்த திட்டத்தில் முதலீட்டாளர் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளர் விரும்பினால், முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டைத் தொடரலாம். முதலீட்டாளர் PF கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதற்கு அவர் முதிர்வுக்கு ஒரு வருடம் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

7 /9

PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் முதிர்வுக்கு முன்னரும் பகுதியளவு தொகையை எடுக்கலாம். அவசர காலங்களில், முதலீட்டாளர் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதத்தை எடுக்கலாம். இருப்பினும், பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகுதான் பகுதியளவு தொகையை எடுக்க முடியும்.

8 /9

பிஎஃப் கணக்கில் 3 வருடங்கள் முதலீடு செய்த பின்னரே கடன் வாங்க முடியும். முதலீட்டாளர் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் மட்டுமே கடனாகப் பெறுகிறார். கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 36 மாதங்கள் ஆகும். அதற்கு 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.  

9 /9

PPF திட்டம் ஒரு வகையில் கோடீஸ்வர திட்டமாக உள்ளது. முதலீட்டாளர் தினமும் ரூ.405 முதலீடு செய்தால், அவர் ஆண்டுக்கு ரூ.1,47,850 முதலீடு செய்வார். அவர் தனது கணக்கில் 25 ஆண்டுகள் முதலீடு செய்து 7.1 சதவீத வட்டியைப் பெற்றால், முதிர்வு நேரத்தில் அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் கிடைக்கும்.