அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

How To Become Attractive Man : ஆண்கள் பலருக்கு, தாங்கள் எப்படி பிறரை வசீகரிக்க வேண்டும், எப்படி பிறரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது தெரியாது. அதற்கான டிப்ஸ், இதோ.

How To Become Attractive Man : “நீ நடந்தால் நடையழகு..” என உங்களை பார்த்தும் பல பெண்கள் பாட வேண்டுமா? கவலையே வேண்டாம், அதற்கென சில டிப்ஸ்கள் இங்கு இருக்கின்றன. பிறக்கும் போதே எந்த ஆணும் வசீகரமாக பிறப்பதில்லை. அவர்கள் அவர்களாகவே மாற்றிக்கொண்டால்தான் உண்டு. அப்படி செய்வதற்கு நாம் தினசரி, குணாதிசயத்திலும், நடவடிக்கைகளிலும் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 

1 /7

பிறரை ஈர்க்கும் வகையில் வசீகரமாக இருப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. நாம் நம்மை நன்றாக பார்த்துக்கொண்டாலே போதும். நமக்கு நம்மை பிடித்து விட்டாலே போதும். இருப்பினும், நாம் எப்படி வசீகரமான தோற்றம் கொண்டவராக மாறுவது? இதோ டிப்ஸ்!

2 /7

வசீகரமான மனிதராக மாறுவதற்கு, நாம் தன்னம்பிக்கையை நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உங்கள் உடல் குறித்தோ அல்லது உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்று குறித்தோ தைரியம் இல்லை என்றால், அதை முன்னேற்ற முடியுமா என்று பாருங்கள். அப்படி மாற்றிக்கொள்ள முடியாத விஷயம் என்றால், “ஆம், என்னிடம் இந்த குறை இருக்கிறது. ஆனால் இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே, நான் ஏன் இதனால் பயப்பட வேண்டும்” என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். 

3 /7

வசீகரிக்கும் திறன் கொண்டவர்கள் நன்றாக பேசவும் செய்வார்கள். பிறரை சிரிக்க வைக்கும் அளவிற்கு பேசவில்லை என்றாலும், நீங்கள் பேசுவதை அவர்கள் போர் அடிக்காமல் கேட்கும் அளவிற்கு உங்கள் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

4 /7

உணர்த்திறன் அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பிறரை புரிந்து கொள்ளுதல், சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ளுதல், சமயோஜிதமாக யோசித்தல், கடினமான சூழ்நிலைகளை கையாளுதல் போன்ற திறன்களை கொண்டவராக இருங்கள். 

5 /7

உங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு யாருக்கு உங்களை பிடிக்கும்? எனவே, உங்களை உங்கள் வாழ்க்கையில் முதலில் முன் நிறுத்துங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து பழகுங்கள். ஒரு நண்பனை, ஒரு காதலியை போல உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்படி செய்தாலே, உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக இருந்தால் அனைவருக்கும் உங்களை பிடிக்கவும் ஆரம்பிக்கும். 

6 /7

பிறரிடம் பேசுகையில் சாய்ந்து கொண்டு, தோள்பட்டைகளை சுருக்கிக்கொண்டு பேச வேண்டாம். நேராக, நிமிர்ந்து கண்ணோடு கண் பார்த்து பேசவும். 

7 /7

பிறரை புரிந்து கொள்ளாத, வெடுக்கென கோபமாக பேசும் நபரிடம் சிலர் நெருங்கவே பயப்படுவர். எனவே, முடிந்தவரை கருணை மிகுந்த மனிதராக இருங்கள். அப்படி இருந்தாலே, உங்களை தேடி பலர் வந்து நண்பராக்கி கொள்வர். வாழ்க்கையும் அழகாகும்.