அதிக மன அழுத்தமாக உள்ளதா? இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்!

இன்றைய உலகில் பலருக்கும் மன அழுத்தம் உள்ளது. வேலை, குடும்பம் காரணமாக அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சில வழிகள் மூலம் சரி செய்யலாம்.

 

1 /6

அதிக சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்க உதவும். மேலும் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்தோ அல்லது கடையில் வாங்கி சாப்பிடும் போது மன அழுத்தம் குறைகிறது.  

2 /6

வாரம் முழுவதும் வேலை செய்வது ஒருவித சோர்வையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இதனை போக்க தினசரி உடற்பயிற்சி செய்வது பெரிதும் உதவும்.   

3 /6

தினசரி தியானம் செய்வது மனதிற்கு ஒருவித அமைதியை தருகிறது. இவை மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகளை சரி செய்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கோவிலுக்கு செல்லலாம்.  

4 /6

மன அழுத்தம் குறைய தூக்கம் மிகவும் முக்கியம். தினசரி சரியான தூக்கம் இல்லாத போது, உடல் ரீதியாகவும் அதிக பிரச்சனைகள்  ஏற்படுகிறது. தூங்கும் போது மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  

5 /6

தனியாக இருக்கும் போது அதிக மன அழுத்தம் ஏற்படும். எனவே உங்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வைத்து கொள்ளுங்கள். இவை உங்கள் பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.  

6 /6

கம்மியாக குடித்தாலும் சரி, அதிகமாக குடித்தாலும் சரி குடிப்பழக்கம் கடுமையான மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடலில் ஆல்கஹால் அளவு அதிகம் ஆகும் போது நரம்பியல் மற்றும் மூளையில் பாதிப்பு அதிகமாகிறது.