கை நகத்துக்குள்ள தான் பிரச்சனை இருக்கு, ஆரம்ப புள்ளியே இங்க இருக்கு - உஷார்..!

Nail Care Tips:  உடல் ஆரோக்கியத்துக்கு பிரச்சனையை உருவாக்கும் ஆரம்ப புள்ளியே உங்கள் கை நகத்தில் தான் இருக்கிறது என்பதால் அதனை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

Nail Care Tips:  உங்கள் கைகளையும், நகங்களையும் சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கு மிக முக்கியமானது. கைகள் மற்றும் நகங்கள் இரண்டிலும் தூய்மையைப் பேணவில்லை என்றால் முக்கியமான ஆரோக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள்.

1 /8

நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கைகளிலும், நகங்கள் வழியாகவும் அடைக்கலமாகி, வாய்வழியாக உடலுக்கு செல்கின்றன. 

2 /8

இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதன் மூலமும், சரியாக நகங்களை பராமரிப்பதன் மூலம் தொற்றுநோய்களிலிருந்து உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யலாம். அதனால் எப்படி நகங்களை பராமரிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

3 /8

நகங்களை சின்னதாக வைக்கவும் - உங்கள் நகங்களை குறுகியதாக வைத்துக்கொள்ளுங்கள். அவை சுத்தம் செய்ய எளிதானவை. அத்துடன் இவை கிருமிகள் அடைக்கலமாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. 

4 /8

கைகளை பாதுகாக்கும் மாய்ஷரைசரை வைத்துக் கொள்ளுங்கள். இது பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாக்கும். ஷியா வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்களையும் கைகளில் அப்ளை செய்து கொள்ளலாம். பாக்டீரியாக்கள் தங்காது.

5 /8

நகங்கள் மூலம் உருவாகும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க, அடிக்கடி சரியாக நகங்களை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை சுத்தமாகவும் பராமரியுங்கள்.

6 /8

ரசாயனங்கள் மற்றும் கழிவு பொருட்களை கையாளும்போது கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். இது தோல் மற்றும் நகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.  

7 /8

கைகள் மற்றும் நகங்கள் உட்பட ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கு உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது என்பது நச்சுகளை வெளியேற்றுவதை உடலுக்குள் இயற்கையான திறனை ஆதரிக்கிறது. 

8 /8

நகத்தையும், கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். நகம் தானே என அசலாட்டாக இருந்துவிடாதீர்கள்.