Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!

Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.

 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, கல்லீரல் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்நிலையில், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும் வானத்தை தயாரிப்பது எப்படி என்பதையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

1 /9

கல்லீரல் ஆரோக்கியம்: உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு, அதில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது டீ டாக்ஸ் செய்து நீக்க வேண்டும்.

2 /9

டீடாக்ஸ் பானம் தயாரிக்கும் முறை: கல்லீரலை டிடாக் செய்யும் பானத்தை தயாரிக்கும் முறை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரில், ஐந்து துளசி இலைகள், 10 புதினா இலைகள், பச்சை ஆப்பிளின் துண்டுகள், ஒரு ஸ்பூன் சியா விதைகள் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.

3 /9

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள்: உடலில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சேர்வதால், பலவிதமான உடல்நல பிரச்சனைகள் உருவாகும். அஜீரணம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் கணிசமாக அதிகரிக்கும்.  

4 /9

நச்சுக்களை நீக்கும் டீடாக்ஸ் பானத்தை தொடர்ந்து அருந்துவதால், கல்லீரல் மட்டுமல்ல சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.

5 /9

செரிமான பிரச்சனைகள்: கல்லீரலை தவறாமல் டீடாக்ஸ் செய்வதால், செரிமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு மழைக்காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் அண்டாமல் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

6 /9

உடல் பருமன்: டீடாக்ஸ் பானம், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடலில் சேரும் கொழுப்பை கரைக்கவும் உதவும். வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்ட இதனை தினமும் குடிப்பதால், உடல் பருமன் குறைய வாய்ப்பு உண்டு.  

7 /9

இளமையான சருமம் மற்றும் கூந்தல்: டீடாக்ஸ் பானத்தை தொடர்ந்து உட்கொள்வதால், உள்ளிருந்து உடல் சுத்தம் செய்படுத்தப்படுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். கூந்தலும் வலுவாக இருக்கும். முதுமை சீக்கிரம் அண்டாமல் இருக்கும்.

8 /9

துரித உணவுகள்: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க டீடாக்ஸ் பானத்தை வழக்கமாக அருந்துவதோடு, நொறுக்குத் தீனிகள், பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றையும் தவிர்ப்பது அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

9 /9

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)