உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
முதுகில் ஏற்படும் பருக்களை அகற்ற காமெடோஜெனிக் இல்லாத தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது. இதன் மூலம் அதிகம் பரவாமல் பார்த்து கொள்ளலாம்.
இறுக்கமான ஆடைகள் அணிவதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் தோலுடன் ஆடைகள் ஒட்டிக்கொள்ளும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முடிந்தவரை தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
உடலுக்கு தரமான மெடிக்கல் சோப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள். இவை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. எனவே மென்மையான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தவும்.
அதிகம் எண்ணெய் பசை இல்லாத சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துவது நல்லது. நீங்கள் அதிகம் வெளியில் அலையும் வேலையில் இருந்தால் இவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
நீரேற்றமாக இருந்தால் பருக்களை எளிதாக அகற்றி விடலாம். எனவே உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள். தினசரி அதிகமாக தண்ணீர் குடிப்பது இந்த பிரச்சனைகளை சரி செய்யும்.
பருக்களை கிள்ளிவிட வேண்டாம். முகப்பருக்களை போல உடம்பில் ஏற்படும் பருக்களும் பரவும் தன்மை கொண்டவை. எனவே அப்படி செய்வது இன்னும் அதிகரிக்க செய்யும்.