குளிர்காலத்தில் தொப்பையை துரத்தி அடிக்கும் 3 சூப்பரான பழங்கள்..!

Weight Loss | தொப்பை பிரச்சனை உங்களை பாடாய்படுத்துகிறது என்றால் 3 பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Weight Loss Tips Tamil | உடல் எடையை குறைக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை என்றால் இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1 /8

உடல் பருமனைக் (Weight Loss) குறைக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் அது குறையவில்லை என்றால், அதற்கான தீர்வை இன்று தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை போலவே, எந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

2 /8

உடல் பருமன், தொப்பை உங்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். குளிர்காலம் நீடிப்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உணவு முறை மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தினசரி ஆரோக்கிய சிக்கல் மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள்.

3 /8

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கும் முயற்சியில் இருக்கும்போது எண்ணெய் உணவுகள், அதீத கொழுப்புகளை கொண்டிருக்கும் உணவுகள், சர்க்கரை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

4 /8

அதேநேரத்தில் காய்கறிகள், கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவையும் அளவுக்கு அதிகமாக இருக்கவே கூடாது. சீரான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்தால் நிச்சயம் உங்கள் உடல் எடை குறைப்பு முயற்சி பலன் கொடுக்கும்.  

5 /8

உடல் எடையை குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அந்தவகையில் உடல் கழிவுகளை வெளியேற்றி உங்களை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் 5 பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6 /8

பப்பாளி : பப்பாளி வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். பப்பாளி தோல் ஆரோக்கியம், முடி ஆரோக்கியம், நகங்கள் மற்றும் வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க, தினமும் காலை உணவில் ஒரு கிண்ணம் பப்பாளி சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.

7 /8

ஆரஞ்சு : ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்தது இப்பழம். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது. அதனால் அதிக எடையிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால், அவர் காலை அல்லது மாலையில் தனது உணவில் ஆரஞ்சு சேர்த்துக் கொள்ளலாம். 

8 /8

கொய்யா : குளிர் காலத்தில் கொய்யா பழங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். குளிர்காலத்தில் கொய்யா அதிகளவில் கிடைக்கும். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். சிலர் இதை பழமாகவும், சிலர் சட்னியாகவும் சாப்பிடுவார்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் கொய்யாவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தலாம்.