அமேசான் தனது கிரேட் குடியரசு தின விற்பனை ஜன. 13ஆம் தேதி, அதாவது நாளை தொடங்குகிறது. இதனை அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விற்பனை ஜன. 17ஆம் தேதி வரை இயங்கும் இந்த விற்பனையானது, பலராலும் விரும்பப்படும் iPhone 13 மொபைல் மிக குறைந்த விலையில் கிடைக்கும். இந்த மொபைல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும்.
ஜனவரி 13ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் அதே நாளில் நள்ளிரவு முதல் தள்ளுபடிகளை முன்கூட்டியே அணுகலாம். இந்த விற்பனையின் போது, ஐபோன் 13 மொபைல் 49 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
தள்ளுபடி விவரங்கள்: இதில் மேலும் தள்ளுபடி வேண்டும் என்றால், எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது மாதத் தவணை பரிவர்த்தனைகளைத் தேர்வுசெய்தால், கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் அதன் விலை 48 ஆயிரம் 999 ரூபாயாக இருக்கும்.
எக்ஸ்சேஞ்ச்: அமேசான் பழைய கைபேசியை திரும்பப் பெறுவதற்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் வரை தாராளமான எக்ஸ்சேஞ்ச் மதிப்பை வழங்குகிறது.
இறுதி விலை: வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையைத் தவிர்த்து பிற தள்ளுபடிகளைப் பெற்ற பிறகு ஐபோன் 13 விலை ரூ.48,999 ஆக குறையும். எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் ரூ.26,499 செலுத்த வேண்டும்.
தற்போதைய விலை: iPhone 13 தற்போது Amazon மற்றும் Flipkart இரண்டிலும் 128GB பதிப்பின் விலை ரூ.53 ஆயிரம் ஆகும்.