இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Venus Transit in Gemini : இந்த மாதம் அதாவது ஜூன் மாதம் சுக்கிரன் பெயர்ச்சியடையப்  போகிறது. இந்த ராசி மாற்றம் புதனின் ராசியில் நிகழப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான ராஜயோகம், மகிழ்ச்சியும் உண்டாகும்.

Sukran Peyarchi Palangal: அன்பு, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கக்கூடிய சுக்கிரன் தனது ராசியை அவ்வபோது மாற்றிக்கொண்டே இருப்பார். அதன்படி ஜூன் மாதம் சுக்கிரன் பெயர்ச்சி நிகழப் போகிறது. தற்போது ரிஷப ராசியில் அமைந்துள்ள  சுக்கிரன் ஜூன் 12ல் புதனின் ராசியில் நுழைப் போகிறார். மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போவது சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரும். அந்த ராசிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1 /8

ஒன்பது கிரகங்களும் ராசிகளும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இவை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சிலருக்கு இதனால் சுபபலனும், சிலருக்கு அசுப பலனும் கிடைக்கும்.   

2 /8

சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறார். வரும் ஜூன் 12 ஆம் தேதி, மாலை 6:37 மணிக்கு சுக்கிரன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழைவார். இதன் சுப பலன் பல ராசிகளில் இருக்கும். இதனால் பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெற்றி கிடைக்கும். சுக்கிரனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

3 /8

மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். திருமண பந்தம் மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /8

மிதுனம்: மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வாக்கு அதிகரிக்கும். முதலீடு மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வெளியூருக்கு சுற்றுலா செல்லலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கையில் காதல் இனிமையாக் இருக்கும்.

5 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சுப பலன்களை தரும். கடின உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி உண்டாகும். வருமான அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு அமையும்.

6 /8

கன்னி: சுக்கிரனின் ராசி மாற்றம் கன்னி ராசியினருக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். ஆரோக்கியம் சிறப்பாக் இருக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். தொழிலில் புதிய பணிகளைப் பெறலாம்.

7 /8

தனுசு: சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்குமகத்தான செல்வத்தை அள்ளித் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலையை மேம்படுத்தலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.