இந்த 7 அறிகுறிகள் தெரிந்தால்... உங்கள் மீது காதலருக்கு ஆசையே போய்விட்டது என அர்த்தம்

Relationship Tips: காதல் உறவில் உங்களுக்கு இந்த 7 அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், உங்கள் காதலருக்கு உங்கள் மீதான ஆசையே போயிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

  • Sep 22, 2024, 22:04 PM IST

காதல் உறவில் இருதரப்புக்கும் ஆசையும் அன்பும் இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமான உறவாக வளரும். அந்த வகையில், ஒரு தரப்பு சுணக்கம் காட்டினால் உறவு முறிந்துவிடும்.

 


  

1 /8

தகவல் தொடர்புதான் காதல் உறவின் முக்கியத்துவமானது. அப்படியிருக்க, உங்களின் காதலர் உங்களுக்கு குட்டி குட்டியாக ஆர்வமில்லாத வகையில் மெசேஜ் அனுப்புகிறார் என்றால் உங்கள் மீதான விருப்பம் அவருக்கு குறைந்திருக்கலாம்.  

2 /8

உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்பாமல் அடிக்கடி பிளான்களை கேன்சல் செய்கிறார் என்றாலோ, வேறு யாருடனோ வெளியில் செல்ல பிளான் போடுகிறார் என்றாலோ உங்கள் உறவு பலவீனமாகி உங்கள் மீது அவருக்கு விருப்பம் குறைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.     

3 /8

சின்ன சின்ன விஷயத்திற்கும் பார்ட்னர் உங்கள் மீது வெறுப்பாகிறார் என்றாலோ, கோபப்படுகிறார் என்றாலோ நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பு இருந்த பொறுமை அவரிடம் இல்லாமல் போய்விட்டது என்றாலும் உங்கள் விருப்பம் குறைந்திருக்கலாம்.     

4 /8

காதல் உறவில் அடிக்கடி உங்களுக்கு தவறான புரிதல் ஏற்பட்டாலோ, அடிக்கடி வாக்குவாதம் வருகிறது என்றால் உங்கள் மீதான விருப்பம் அவருக்கு குறைந்திருக்கலாம். அவர் காதல் உறவில் போதிய கவனம் செலுத்த மறுப்பதன் மூலமும் இதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.     

5 /8

பார்ட்னர் உங்களிடம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மறுக்கிறார் என்றாலோ, உங்களிடம் விஷயங்களை பகிர்ந்துகொள்ள மறுக்கிறார் என்றாலோ உங்கள் மீதான ஈர்ப்பு குறைந்திருக்கலாம்.     

6 /8

நீங்கள் எதிர்காலம் குறித்து பேசும்போது பார்ட்னர் அதை தவிர்க்கிறார் என்றாலோ, உங்களுடனான எதிர்காலம் குறித்து சிந்திக்க மறுக்கிறார் என்றாலோ காதல் உறவில் உங்கள் மீதான ஈர்ப்பு அவருக்கு குறைந்திருக்கலாம்.   

7 /8

உங்களை தொடுவதையோ, கண் பார்த்து பேசுவதையோ, கட்டிப்பிடிப்பதையோ பார்ட்னர் தவிர்க்கிறார் என்றால் அவருக்கு உங்கள் மீதான விருப்பம் குறைந்திருக்கலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இது பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. உறவில் சிக்கல் இருந்தால் அதற்கு உரிய வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும். இதனை Zee News உறுதிபடுத்தவில்லை.