IMPS புதிய வசதி அறிமுகம்: இனி கணக்கை இணைக்காமல் ரூ. 5 லட்சம் வரை அனுப்பலாம்!!

IMPS New Service: உங்களின் பெரும்பாலான பரிவர்த்தனைகளை IMPS மூலம் செய்யும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும்.

நீங்கள் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்யும் நபராக இருந்தால், ஐஎம்பிஎஸ் (IMPS), என்எஃப்டி (NFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற பெயர்களை அறிந்திருக்க வேண்டும். 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை. பயனாளியின் கணக்கை இணைக்காமல் கூட பயனர்கள் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். 

1 /8

இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல்வேறு வகையான டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் Phone Pay, Google Pay, Paytm, BHIM உள்ளிட்ட பல UPI செயலிகள் அடங்கும்.

2 /8

இத்தகைய டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆன்லைன் வங்கி வசதிகளைப் பயன்படுத்தி, பயனர்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் ஒருவருக்கொருவர் பணத்தைப் பரிமாற்றம் செய்கிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யும்போது சில நேரங்களில் பிரச்சனை அதிகரிக்கிறது.  

3 /8

அத்தகைய சூழ்நிலையில், பயனாளியின் வங்கிக் கணக்கு, கணக்கு பெயர், தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களை பணம் அனுப்புபவர் முதலில் உள்ளிடுவது அவசியமாகிறது. இருப்பினும், இந்த செயல்முறையை எளிதாக்க, உடனடி கட்டண சேவை அதாவது IMPS தனது சேவையில் ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது (IMPS New Service Update 2023). சேவையைப் புதுப்பிப்பதன் மூலம், பயனாளிகளின் கணக்கை இணைக்காமல் பணம் அனுப்ப முடியும்.

4 /8

5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை. பயனாளியின் கணக்கை இணைக்காமல் கூட பயனர்கள் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இந்த வசதியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.  

5 /8

IMPS இன் புதிய சேவை பயனாளியை சரிபார்க்கும், அதாவது வெரிஃபை செய்யும் வசதியையும் வழங்கும். தொலைபேசி எண்ணின் மூலமாகவே கணக்கு எண் சரியானதா இல்லையா என்பதை நீங்கள் கண்டறிய முடியும். வங்கி விவரங்களை மீண்டும் சரிபார்க்கும் வசதியும் வழங்கப்படும். மொத்த மற்றும் சில்லறை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த அமைப்பை விரிவுபடுத்தும் வகையில் இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளதாக NPCI கூறுகிறது.

6 /8

பயனாளியின் வங்கிக் கணக்கை இணைக்காமல், இரண்டு முறைகளைப் பின்பற்றி பயனாளிக்கு பணத்தை அனுப்பலாம். இதற்கு நீங்கள் வங்கி கணக்கு எண், பேங்க் ஹோல்டரின் பெயர், IFSC குறியீட்டை உள்ளிட வேண்டும். இதன் மூலம் பயனாளிக்கு பணம் அனுப்பலாம்.

7 /8

இது தவிர, பயனாளிக்கு பணம் அனுப்பும் மற்றொரு முறை உள்ளது. இதில், பயனாளியை அடையாளம் காண தொலைபேசி எண் மற்றும் மொபைல் பண அடையாளங்காட்டி (Mobile Money Identifier) அதாவது எம்எம்ஐடி (MMID) -ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். MMID என்பது 7 இலக்க எண் ஆகும். இது வங்கியால் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

8 /8

உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) என்பது இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு இடையேயான மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பாகும். மொபைல் போன்கள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மின்னணு நிதி பரிமாற்ற சேவையை IMPS வழங்குகிறது. இதில் வங்கி விடுமுறைகள் உட்பட ஆண்டு முழுவதும் 24x7 சேவை கிடைக்கும்.