புதன் உதயம்... இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு... பண நெருக்கடி!

புதன் உதயம் 2024: ஏப்ரல் 19, 2024 அன்று, புதன் காலை 10:23 மணிக்கு மீனத்தில் உதயமாகும். புதனின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும், நிதி இழப்பையும் சந்திக்கலாம் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

புத்தி மற்றும் அறிவாற்றலின் காரணியாக கருதப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதி.  ஜாதகத்தில் புதன் வலுவிழப்பதால் ஒருவரது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

1 /7

மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை, புதனின் உதயத்தால் பாதிக்கப்படலாம். பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். நீங்கள்  கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வருமானமும் குறையும்

2 /7

மிதுன ராசிக்காரர்கள் புதன் உதயத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும். இந்த காலகட்டத்தில், பணம் தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக்கூடாது. இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்கள் பொறுப்புகளும் செலவுகளும் அதிகமாகும்.

3 /7

துலாம் ராசிக்காரர்கள் புதன் உதயத்தினால் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகப் நேரிடும். நீங்கள் கடன் வாங்கவும் நேரிடலாம்.  

4 /7

விருச்சிக ராசிக்காரர்களுக்கு,மீன ராசியில் புதன் உதயம் ஆவதால்  பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திடீர் நிதி இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. உங்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம்.

5 /7

தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நிதி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். அதை நீங்கள் கவனமாக கையாள கடினமாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

6 /7

கும்ப ராசிக்காரர்களுக்கு, புதன் உதயம் காரணமாக உங்கள் நிதி நிலை மோசமடையலாம். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் கடினமாக இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.