WWE தொழில்முறை மல்யுத்த வீரர் ரிங்கு சிங் என்னும் வீர மகனின் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்

இந்தியரான ரிங்கு சிங் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) இல் வீர் மகானாக தனது இடத்தைப் பிடித்துள்ளார்.  தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவதற்கு முன்பு,  மில்லியன் டாலர் ஆர்ம்ஸ் என்ற மதிப்புமிக்க பட்டத்தையும் வென்றார். பிட்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற பேஸ்பால் அணியிலும் அவர் இடம்பெற்றார்.

1 /5

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பிறந்த ரிங்கு சிங் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஆனால் பல்வேறு விளையாட்டுகளில் திறமை பெற்றவர். சிறு வயதில் கிரிக்கெட் விளையாடினார். ஈட்டி எறிதலில் ஜூனியர் தேசிய சேம்பியன் பதக்கம் வென்றவர் ரிங்கு சிங். Photo: YouTube

2 /5

2008 இல் மில்லியன் டாலர் ஆர்ம் போட்டியில் வென்றதும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. 2009 இல் பிட்ஸ்பர்க் பைரேட்ஸ் அணிக்காக அறிமுகமான பிறகு தொழில்முறை பேஸ்பால் லீக்கில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெயர் பெற்றார்.  Photo: Pittsburgh Pirates

3 /5

2018 இல் WWE போட்டிகளில் கலந்துக் கொண்டார். துபாயில் நடைபெற்ற போட்டிகளில் அனைவரையும் கவர்ந்தார்.

4 /5

ரிங்கு சிங், சக இந்திய மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜருடன் இணைந்து 'இண்டஸ் ஷெர்' டேக் டீமின் ஒரு பகுதியாக தனது WWE NXT அறிமுகத்தை தொடங்கினார்.

5 /5

ரிங்கு சிங் WWE RAW இல் அறிமுகமாகி பெரிய லீக்குகளுக்குச் சென்றார், தற்போது 'வீர் மஹான்' என்ற பெயரில் மல்யுத்த விளம்பரத்தின் டாப் ஷோவில் பணியாற்றி வருகிறார்.