Interest Rates Of Post Office schemes: ஆபத்து இல்லாத சேமிப்பாகவும், சுலபமாக அணுகக்கூடியதாகவும் இருக்கும் தபால் நிலையத்தின் வைப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் வரியைச் சேமிக்கிறது, உத்தரவாதமான வருமானத்தைத் தருகிறது...
TDS Saving Plans: அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமான 'டைம் டெபாசிட்' (Time Deposit) வரிச் சேமிப்புக்கான சிறந்த திட்டமாகும். போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கை நாட்டின் எந்த தபால் அலுவலகத்திலும் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கு செய்யும் டெபாசிட்களுக்கு வரியை மிச்சப்படுத்தலாம்
தபால் நிலையத்தின் வைப்புத் திட்டம் வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையைப் போன்றது. 1, 2, 3, 5 ஆண்டுகளுக்கு தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு தொடங்கலாம். இதில், 5 வருட டெபாசிட்களுக்கு வரி விலக்கின் பலன்கள் கிடைக்கும்
அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் பணத்தை சேமித்தால், நாம் கட்டும் வரியைச் சேமிக்கலாம். மேலும், உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்
நாட்டில் உள்ள இரண்டு வகையான வரி முறைகளில்,. பிரிவு 80C இன் வரி விலக்கு பழைய வரி முறையில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் படி, 5 வருட டெபாசிட்டில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஆபத்து இல்லாத முதலீட்டை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, தபால் நிலைய நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்
போஸ்ட் ஆபிஸ் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கணக்கு தொடங்கலாம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கை தனியாகவோ அல்லது கூட்டாகவோ (3 உறுப்பினர்கள் வரை) திறக்கலாம்
தற்போதைய வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொண்டு பணத்தை சேமிக்கத் தொடங்கவும். 1 வருட டெபாசிட்களுக்கு 6.9 %, 2 ஆண்டுகளுக்கு 7.0% என்றால், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 % மற்றும் 5 ஆண்டு டெபாசிட்களுக்கு 7.5% என வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
POTD கணக்கில் முன்கூட்டியே அல்லது முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்க வசதி உள்ளது. இது முதிர்ச்சிக்கு முன் திரும்பப் பெறுதல் என்று அழைக்கப்படுகிறது. விதிகளின்படி, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு முதிர்வுக்கு முன் பணம் எடுக்கலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6-12 மாதங்களுக்குள் பணம் எடுத்தால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதங்களின்படி வட்டி கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை