லக்னோ - கொல்கத்தா போட்டியின் சுவாரஸ்யங்கள்

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது

வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெறும் 2 ரன்களில் தோல்வியை தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது

1 /5

டாஸ்வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய டிகாக் 140 ரன்கள் விளாசினார். ஐபிஎல் தொடரில் தனிநபர் ஒருவரின் 3வது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.

2 /5

இப்போட்டியில் லக்னோ அணி விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது. கே.எல்.ராகுல் - டிகாக்கின் சாதனை பார்ட்னர்ஷிப்பாகவும் பதிவாகியுள்ளது.   

3 /5

அதிரடியாக விளையாடி ரிங்கு சிங் லக்னோ அணிக்கு பயம் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எவின் லூயிஸ் பறந்து வந்து கேட்ச் பிடித்தார். இந்த ஐபிஎல் போட்டியில் சிறந்த கேட்சாகவும் பதிவாகியுள்ளது.

4 /5

அணியை வெற்றிப் பாதைக்கு அருகில் அழைத்துச் சென்ற ரிங்கு சிங், தோல்வியை தழுவியதும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்ட அவர், நேற்று 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.  

5 /5

லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மொனீஷ்கான் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் மற்றும் டோமர் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.