CSK vs DC : தோனியை மீம் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்ஸ்! சென்னை தோற்றும் ஜெயித்ததாக புகழாரம்..

IPL 2024 CSK Vs DC Match Viral Memes : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றுப்போனாலும் தோனியின் தரிசனம் கிடைத்ததாக பல நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டுள்ளனர். 

IPL 2024 CSK Vs DC Match Viral Memes : ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில், டெல்லி அணி நேற்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், சென்னை அணிக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே கொஞ்சம் தடுமாற, தொடர்ந்து வந்த ஒரு சில ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பரிகொடுத்தது. இதையடுத்து, ‘தல’ தோனி களமிறங்கினார். கிட்டத்தட்ட 300+ நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் தல தரிசனம் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். நேற்றைய போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும் தோனியை களத்தில் கண்டது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இங்கே பார்ப்போம். 

1 /7

ஐபிஎல் சீசன் ஆரம்பித்தாலே அதனுடன் சேர்ந்து ரசிகர்களின் மீம் கலாட்டாக்களும் ஆரம்பித்து விடும். அதிலும் நேற்று நடைப்பெற்ற சென்னை vs டெல்லி போட்டியை பற்றி கூறவே வேண்டாம். சும்மாவே ஆடும் சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று தல தோனியை களத்தில் பார்த்ததில் இருந்து உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்றனர். அவர்கள் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு பார்ப்போம். 

2 /7

‘லியோ லியோ லியோ...லீயோ...”விஜய்யின் லியோ பட காட்சியை வைத்து பதிவிடப்பட்டுள்ள மீம்ஸ்

3 /7

“தல தோனியை பார்த்தே போதும்..” என நிம்மதியடைந்த ரசிகர்கள்.

4 /7

“தல தோனியை இனிமே ஓப்பனராக இறக்கிவிடலாமா?”

5 /7

“அந்த பயம் இருக்கணும்...” 

6 /7

அதான..ஜெயிச்சது டெல்லி தான? சென்னை ரசிகர்கள் ஏன் செலிபிரேட் பண்றாங்க?

7 /7

வர வர பதிரானாவுக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கிட்டே போகுதே..!