IPL 2024: காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ள வீரர்கள்!

IPL 2024: காயம் காரணமாக ஒவ்வொரு ஐபிஎல் அணியில் இருந்தும் சில வீரர்கள் இந்த ஆண்டு விளையாட முடியாமல் போகி உள்ளது.

 

1 /5

சென்னை சூப்பர் கிங்ஸ் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கட்டைவிரல் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்தார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 /5

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக IPL 2024ல் இருந்து இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் விலகி உள்ளார்.  Phil Salt அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் பணிச்சுமையை நிர்வகிக்க ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.  

3 /5

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடந்த மாதம் தசைநார் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ரஞ்சி கோப்பையின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

4 /5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.  அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.    

5 /5

குஜராத் டைட்டன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக IPL 2024ல் இருந்து வெளியேறி உள்ளார்.  சமீபத்தில் லண்டனில் ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் டாஸ்மேனியாவுக்காக ஷெஃபீல்ட் ஷீல்ட் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளதால் முதல் இரண்டு போட்டிகளை தவற விட வாய்ப்புள்ளது.