பளிங்கு சிலை டூ பழங்குடியின பெண்! ஜெய் பீம்-ல் கலக்கிய லிஜிமோல்!

லிஜிமோல் ஜோஸ் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர்.

லிஜிமோல் ஜோஸ் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர்.

 

1 /4

லிஜிமோல் ஜோஸ் சிறிது நாட்கள் 'ஜெய் ஹிந்த்' என்ற தொலைக்காட்சியில் பணியாற்றினார்.  அதன்பின்னர்,கடந்த 2016-ம் ஆண்டு 'மஹேஷிண்டே பிரதிகாரம்' மற்றும் 'கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன்' என்ற இரு திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்  

2 /4

தமிழில் 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தில் சித்தார்த்திற்கு மனைவியாகவும்,ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அக்காவாகவும் திறமையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.  அதன் பின்னர் 'தீதும் நன்று' என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்தார். இவர் திடீரென்று அக்டோபர்-4ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  

3 /4

இந்நிலையில் இன்று(நவம்பர்-2) அனைவரையும் கதிகலங்க வைத்து, பலதரப்பு பாராட்டுக்களையும் பெற்ற 'ஜெய் பீம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   காவல் நிலையத்திலிருந்து காணமல் போகும் தன் கணவனை மீட்டெடுக்க போராடும் ஒரு பழங்குடியின பெண்ணின் மிகப்பெரிய போராட்டம் தான் இந்த படம்  

4 /4

இதில் பழங்குடியினர் படுகின்ற துன்பங்களையும்,கணவனை மீட்டெடுக்க போராடும் ஒரு மனைவியின் வேதனையையும் லிஜிமோல் சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்ததோடு,இவரது மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.