700 ரூபாய்க்கு எக்கச்சக்க டேட்டா... ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் பிளான்!

Jio Prepaid Plans: ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் வழங்கும் டேட்டா உள்பட கூடுதல் டேட்டா, வரம்பற்ற காலிங், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது. 

 

 

 

 

1 /7

ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல்வேறு விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பல பிளான்களில் தினந்தோறும் அளிக்கப்படும் டேட்டாக்களுடன் கூடுதல் டேட்டா பலன்களையும் வழங்குகிறது.   

2 /7

அந்த வகையில், இங்கு நாம் காண உள்ள ஜியோவின் ரீசார்ஜ் திட்டத்திலும் தினந்தோறும் அளிக்கப்படும் டேட்டாக்களுடன் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் நீங்கள் செலவிட வேண்டாம், அந்த திட்டம் 700 ரூபாய்க்கும் குறைவானதுதான்.   

3 /7

முன்பு குறிபிட்ட அந்த திட்டம் ஜியோவின் ரூ.699 ப்ரீபெய்ட் பிளான்தான். ஆனால், இந்த பிளானில் வேலிடிட்டி 28 நாள்களாகும். வேலிடிட்டி குறைவாக இருந்தாலும் இந்த பிளானில் நன்மைகள் ஏராளம். அதனை இதில் காணலாம். 

4 /7

இந்த பிளானில் பயனர்கள் தினமும் 1ஜிபி, 2ஜிபி இல்லை, 5ஜிபி டேட்டாவை பெறுகின்றனர். 28 நாள்கள் வேலிடிட்டியில் நீங்கள் மொத்தம் 140ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.   

5 /7

தினமும் 5ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 16ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். ஒருநாளுக்கான 5ஜிபி டேட்டா முடிந்த உடன் இந்த 16ஜிபி டேட்டா கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

6 /7

16ஜிபி டேட்டாவும், அன்றைய நாளுக்கான 5ஜிபி டேட்டாவும் முடிந்துவிட்டால் இணைய வேகம் @64kbps ஆக குறைந்துவிடும். இதன்மூலம், தினமும் 5ஜிபி மற்றும் கூடுதல் 16ஜிபி என மொத்தம் 156ஜிபி டேட்டாக்கள் வழங்கப்படுகிறது. 

7 /7

டேட்டா மட்டுமின்றி வரம்பற்ற காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஜியோ ஆப்களுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.