அச்சு அசல் ஐஸ்வர்யா ராயை உரித்து வைத்திருக்கும் பாகிஸ்தான் பெண்! வைரலாகும் போட்டோஸ்..

Photos Of Aishwarya Rai Lookalike Pakistan Woman : நடிகை ஐஸ்வர்யா ராய்யை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஐஸ்வர்யா போலவே இருக்கும் பாகிஸ்தான் பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரது புகைப்படங்கள் இதோ!

Photos Of Aishwarya Rai Lookalike Pakistan Woman : இந்திய திரையுலகில் சூப்பர்  ஸ்டார் நடிகையாக விளங்கி வருகிறார், நடிகை ஐஸ்வர்யா ராய். இவர், உலக அழகி ஆன பிறகு தமிழில் அறிமுகமான படம், இருவர். இந்த படத்திற்கு பிறகு அவர் பல ஜீன்ஸ் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவருக்கு 51 வயதாகிறது. இந்த வயதிலும், பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் இவர்தான் இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறார். இதையடுத்து, இவரைப்போலவே இருக்கும் ஒரு பாகிஸ்தான் பெண்ணின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

எத்தனை உலக அழகிகள் வந்தாலும், பல ஆண்டுகளுக்கு இந்தியர்களால் உலக அழகி என அழைக்கப்பட்டு வருபவர், ஐஸ்வர்யா ராய். தமிழ், இந்தி, ஆங்கிலம், கன்னடம், துலு, பெங்காலி என பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர், தற்போது திரைத்துறையில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கிறார். 

2 /7

ஐஸ்வர்யா ராய் இளமையாக இருந்த சமயத்திலும் சரி, தற்போது 51 வயதான போதும் சரி, இவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று நினைக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அப்படியிருக்க, ஒரு சிலர் “நாமும் ஐஸ்வர்யா ராய் போல மாற வேண்டும்” என்று நினைப்பதுண்டு. 

3 /7

தற்போது இணையத்தில் ஒரு பெண் வைரலாகி வருகிறார். அவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார். 

4 /7

இந்த பெண், பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரது பெயர் கன்வல் சீமா (Kanwal Cheema). ஐஸ்வர்யா ராய் போலவே இவருக்கும் நீளம் மற்றும் பச்சை நிறத்துடன் இருக்கிறது. அது மட்டுமல்ல, இவரது குரலும் கூட அப்படியே ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறது. 

5 /7

இஸ்லாமாபாத்தில் இருக்கும் இவர், சமீபத்தில் தனது பெற்றோருடன் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

6 /7

இவரை பார்த்த பலர், “பாகிஸ்தானி ஐஸ்வர்யா ராய்” என்று அழைத்து வந்தனர். ஒரு நேர்காணலில் இவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இவர், “எனது பேச்சை நீங்கள் கேட்டிருந்தால் அதைப்பற்றிக் கேள்வி கேளுங்கள். என் முகத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்பது ஏன்?” என்று கோபப்பட்டார். 

7 /7

தற்போது இந்த பெண்ணின் புகைப்படத்தை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு பலர் வைரலாக்கி வருகின்றனர்.