டால்பின் (Dolphin) என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி இனம் ஆகும். இதன் தமிழ் பெயர் ஓங்கில் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஓங்கில் எனப்படும் டால்பின், திமிங்கலம் மற்றும் கடற்பன்றி ஆகியற்றுக்கு நெருங்கிய இனத்தைச் சேர்ந்தது. சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள் உள்ளன... அவற்றில் சிலவற்றின் புகைப்படங்கள்...
Also Read | ஆமைகளுக்கு ஆபத்தான டிரைவராக மாறிய ஹிப்போபொட்டாமஸ் சவாரி
டால்பின்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை நீளமும் 40 கிலோகிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டன
டால்பின்கள் ஊனுண்ணிகள்; மீன்களை உணவாகக் கொள்கின்றன.
டால்பின்களின் ஆயுட்காலம் பொதுவாக 20 ஆண்டுகள்
உலகம் முழுவதும் டால்பின்கள் வசித்தாலும் கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் அதிக அளவில் வசிக்கின்றன
டால்பின்களுக்கு அறிவுக் கூர்மை அதிகம். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன
நீங்கள் டால்பினை பார்த்திருக்கலாம். ஆனால் இளஞ்சிவப்பு நிற டால்பினை பார்த்ததுண்டா?