எச்சரிக்கை! ‘இந்த’ பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

 

1 /5

பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்.  பூண்டு குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதத்தை உறிஞ்சும். பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மற்ற காய்கறிகளிலும் துர்நாற்றம் ஏற்படும்.

2 /5

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி சீக்கிரம் கெட்டுவிடும். இது தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்தையும் குறைக்கிறது.  

3 /5

உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதால், அதில் இருக்கும் மாவுச்சத்தின் தன்மை மாறுகிறது. அத்தகைய உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.

4 /5

வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயம் குளிர்சாதன பெட்டி போன்ற மூடிய இடத்தில் சேமிக்கப்படும் போது, ​​அவை துளிர்க்க ஆரம்பிக்கும். வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதால் துர்நாற்றமும் வரத் தொடங்குகிறது.  

5 /5

வெள்ளரிக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அது மிகவும் குளிர்ச்சியாகி, ஆரோக்கியத்தைக் கெடுக்கும். மேலும், விரைவில் அழுகத் தொடங்கும்.