வாழ்க்கை அவ்வளவு தான்... 2 வாரம் முன் கலகலவென பேசிய 2 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்!

Actor Marimuthu Death: பிரபல நடிகர் ஆர்.எஸ். சிவாஜி கடந்த செப். 2ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Sep 08, 2023, 13:00 PM IST

 

 

 

 

 

 

 

1 /7

ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கடந்த மாதம் இறுதியில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றனர்.   

2 /7

அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகியோர் மிகவும் கலகலப்பாக பேசி அதனை ரசிக்கத்தக்க அளவில் கொண்டு சென்றனர். 

3 /7

அந்த நிகழ்ச்சி கடந்த ஆக. 20ஆம் தேதி ஒளிப்பரப்பானது. அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ யூ-ட்யூபில் உள்ள நிலையில், அதுவே பார்வையாளர்களை சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. 

4 /7

அந்த ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து போன்ற இரு சிறந்த நடிகர்களையும் தமிழ் திரையுலகம் அடுத்தடுத்து இழந்துள்ளது.   

5 /7

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர்,"2 வாரம் முன்னாடி Telecast ஆன நிகழ்ச்சில சந்தோஷமா வந்துட்டு போன 2 பேர் இப்ப இல்ல!" என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.   

6 /7

மாரிமுத்து இன்று காலை உயிரிழந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

7 /7

மாரிமுத்துவின் உடல் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாஸ்கர் காலணியில் அவரது பூத உடலானது வைக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 3 மணி அளவில் தேனியில் உள்ள அவரது சொந்த ஊர் பசுமலைதேரிக்குச் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட உள்ளது.