தில் ராஜூ - ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் - அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது இதுக்குறித்து மேலும் படிப்போம்.
தமிழ் - பான் இந்தியா படம் முக்கியத்துவம்.. தில் ராஜூ- ஆதித்யாராம் கூட்டணி அதிரடியை இந்த ‘கேம் செஞ்சர்’ படத்தின் மூலம் ஒருப் புதிய அப்டேட்டை மக்களுக்கு கொடுத்துள்ளது. மேலும் இதுப்பற்றிய தகவலை விரிவாக இங்கு காண்போம்.
சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
பாலிவுட் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிக்கவிருக்கும் தமிழ் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இப்படத்தில் இணைந்துள்ளார்.
பான் இந்தியா திரைப்படங்களை தொடர்ந்து இணைந்து தயாரிக்க இருப்பதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் அறிவித்துள்ளன.
'கேம் சேஞ்சர்' படத்திற்காக இந்த கூட்டணி முதன்முதலில் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும் அதிக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 10 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து ஆதித்யாராம் பேசியது "எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது.
ஆதித்யாராம் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டதால் திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன் என்று இவ்வாறுக் கூறினார்.