RAC பயணிகளுக்கு நல்ல செய்தி, ஏசி சீட் கிடைக்கும்... இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை..!

Indian Railways | ஆர்ஏசி பயணிகளுக்காக நல்ல செய்தி கிடைக்கும் விதமாக இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்திருக்கிறது. 

ஆர்ஏசி பயணிகளுக்கு ஏசி சீட் ரயில்வேயில் எப்படி கிடைக்கும்? என்பது குறித்து விரிவான தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். 

1 /9

நாள்தோறும் கோடிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ரயிலில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே (Indian Railways) பல முக்கிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நல்ல செய்தி என்றே சொல்லலாம். 

2 /9

ஏனென்றால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சீட் உறுதியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இறுதிகட்ட நேரத்தில் டிக்கெட் இல்லாமல் போகலாம் அல்லது ஆர்ஏசி ஒதுக்கப்படும். அதாவது புக்கிங் கோச்சில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு செல்ல வேண்டியிருக்கும். 

3 /9

இவர்களுக்கு தான் இப்போது நல்ல செய்தி வந்திருக்கிறது. ஆர்ஏசி பயணிகளுக்கு இனி ஏசி கோச்சில் சீட் கிடைக்கும். இப்போது AC பெட்டிகளில் RAC புக்கிங்கில் இருந்தால், ரயில் டிக்கெட் ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு ரயில் பயணிகளும் முழு படுக்கை வசதி கிடைக்கும். 

4 /9

இதற்கு முன்பாக, RAC டிக்கெட்டில் பயணிக்கும் இரண்டு பயணிகளுக்கு ஒரே படுக்கை சீட் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே சீட்டை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது சிரமத்திற்கும் வாக்குவாதத்திற்கும் வழிவகுத்து கொண்டிருக்கிறது.   

5 /9

இப்போது இந்திய ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கையில் ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு இரண்டு பெட்ஷீட்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பேக்கேஜ் கிடைக்கும்.

6 /9

RAC டிக்கெட்டைப் பெற்ற பயணிகள் முழுக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் லோயர் பெர்த்தின் பாதி இருக்கையில் பயணிக்க வேண்டியிருக்கிறார்கள். இப்படி பயணிக்கும்போது ரயில் பயணிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் போலவும் உணர செய்கிறார்கள். 

7 /9

இருப்பினும், இப்போது இந்த பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள்போல படுக்கை வசதியைப் பெறலாம். இந்திய ரயில்வேயில் பணியாற்றும் பிஆர்ஓ அசோக் குமார் பேசும்போது, ரயிலில் ஆர்ஏசி டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு ஏசி கோச்சில் இடம் இருந்தால் அங்கு டிக்கெட் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.   

8 /9

ரயிலில் உள்ள டிடிஆர் கூட இந்த முடிவை எடுக்கலாம். அதற்கு முன்பே டிக்கெட் கன்பார்ம் லிஸ்ட் கடைசியாக விடும்போது ஏசி பெட்டிகளில் சீட் ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார் அவர். 

9 /9

அசோக்குமார் மேலும் பேசும்போது, " RAC பயணிகளுக்கு நல்ல செய்தி. கன்பார்ம் டிக்கெட்டுகளுடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அதே வசதிகள் இனி இவர்களுக்கும் கிடைக்கும். ஏசி சீட் ஒதுக்கப்படும். ஆனால் சீட் இருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.