இந்தியா தவிர ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள்?

ஆகஸ்ட்-15ம் தேதியான இன்றைய தினம் இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இன்று இந்திய மட்டுமின்றி சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

 

1 /4

தென் கொரியா மற்றும் வட கொரியா : ஆகஸ்ட் 15, 1945 முதல் தென் கொரியா மற்றும் வட கொரியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  தென் கொரியாவில், இந்த நாள் ‘Gwangbokjeol’ என்றும், வட கொரியாவில் இது‘Chogukhaebangŭi nal’ என்றும் அழைக்கின்றனர்.  

2 /4

பஹ்ரைன் : இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகளுக்கும் பின்னர் பஹ்ரைனில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியும் முடிவுக்கு வந்ததையடுத்து ஆண்டு ஆகஸ்ட் 15, 1971 அன்று சுதந்திரம் கிடைத்தது.  

3 /4

காங்கோ : 80 ஆண்டுகால பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு காங்கோ ஆகஸ்ட் 15, 1960 அன்று சுதந்திரமடைந்தது.  அன்று முதல் இன்றுவரை இந்த நாட்டில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

4 /4

லிக்டென்ன்ஸ்டைன் : 1866 இல் ஜெர்மன் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட உலகின் ஆறாவது சிறிய தேசமான லிக்டென்ன்ஸ்டைன்  ஆகஸ்ட்-15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.  ஆகஸ்ட்-15 'மேரி டே' என்பதால் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர்.