lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!

லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 

லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

1 /7

நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக கூட்டணியே முன்னிலை வகித்தது. 

2 /7

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்த தேர்தலிலும் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்றுள்ளது.

3 /7

இதன் மூலம் மீண்டும் மத்தியில் பாஜக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இம்முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது.

4 /7

தொங்கு பாராளுமன்றமே அமைந்திருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். இதில் ஏதேனும் ஒரு கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் கூட பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும்.

5 /7

தொங்கு பாராளுமன்றமே அமைந்திருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். இதில் ஏதேனும் ஒரு கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் கூட பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும்.

6 /7

இது ஒருபுறம் இருக்க இந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ஒருவர் பத்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

7 /7

அதனால், மக்கள் பெரும்பான்மையாக நோட்டாவுக்கு வாக்களித்தனர். இந்த தொகுதியில் மட்டும் சுமார் 2,18,674 வாக்குகள் நோட்டாவுக்கு சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.