புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ்! இயக்குனர் யார் தெரியுமா?

Lokesh Kanagaraj: விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

 

1 /6

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.  

2 /6

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார்.  

3 /6

தற்போது G Squad என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.   

4 /6

முதலில் தனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

5 /6

மேலும் தனது தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.  

6 /6

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி லோகேஷ் கனகராஜ் தனது நண்பர் ரத்தினகுமாரை வைத்து முதல் படம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.