பணப் பிரச்சனையை தீர்த்து பணமழையை பெய்ய விநாயகரை இப்படி வழிபடுங்கள்!

Ganapathy Worship To Get Rid Of Money Issues: பணத் தட்டுப்பாட்டால் கவலையாய் இருக்கிறதா? விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு... புதன்கிழமையில் கணபதியை வணங்குவது பணப் பிரச்சனைகளை தீர்க்கும்....  

வழிபாடு என்றாலே முதலில் மனதில் தோன்றுவது முழு முதற் கடவுள் விநாயகர் வழிபாடு தான். அதிலும் கணபதிக்கு உரித்தான புதன்கிழமை நாளன்று விநாயகரை வழிபட்டு வாழ்வில் செழிப்பையும் வளத்தையும் பெறலாம்...

1 /8

ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வழிபாடு செய்யும் நாள் என்பது முக்கியமானது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்குவது சிறப்பு என்றால், அதிலும் புதன் கிழமையன்று விநாயகர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

2 /8

கணபதியின் ஆசிர்வாதத்துடன் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் தடைகள் நீங்கி காரியம் வெற்றியடையும். அதனால்தான் விநாயகப் பெருமான் தடைகளை நீக்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார்

3 /8

தொழிலில் பிரச்சனை, தொடர் தோல்விகள் என மனம் சஞ்சலப்பட்டால், புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபடுவது பிரச்சனைகளைத் தீர்க்கும்.  

4 /8

விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டால் இன்னல்கள் அறுந்துபோகும், நிம்மதி உங்களிடம் சரணடையும்

5 /8

புதன்கிழமை நாளில் கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கிய பிறகு, 5, 7, 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் கணபதியை வலம் வரவேண்டும்

6 /8

பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், புதன்கிழமை அன்று பசுவுக்கு உணவளிக்க வேண்டும்

7 /8

புதன் அன்று விநாயகப் பெருமானுக்கு பச்சை நிற வஸ்திரத்தை சாற்றுவதும், நாம் பச்சை நிற ஆடை அணிவதும் நல்லது

8 /8

புதன் தோஷத்தின் தாக்கத்தை குறைக்க விநாயகர் வழிபாடு நல்லது. பணப்பிரச்சனைகளை தீர்த்து வாழ்வில் வளம் பெற விநாயகர் வழிபாடு அவசியமானது