Rishaba Vratham : நந்தி தேவர், சிவபெருமானுக்கு வாகனமாக இருப்பவர். ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் ஆகிய பெயர்களாலும் நந்தி தேவர் அறியப்படுகிறார்
பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடைபெறும்போது, சிவனின் வாகனமான நந்திக்கு முதலில் அபிஷேகம் செய்வது வழக்கம். பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபட்டால் நல்லவை அனைத்தும் நடக்கும்...
சிவபெருமானின் வாகனமான நந்திதேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். இந்த வழிபாடு நற்கதியைத் தரும்
ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதத்தில் ரிஷப விரதம் இருக்கலாம்
வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது
ரிஷப விரதம் இருக்கும்போது காலையில் எழுந்ததும், நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்
ரிஷபாரூடர் சிவனுக்கு பூ போட்டு, வழிபட வேண்டும்.
சிவனுக்கு பிடித்த அரிசியால் செய்த்த பாயசத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாளன்று காலை முதல் இரவு வரை உண்ணாமல் இருக்க வேண்டும். உணவு உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்
வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபக்கத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.