சூரியனை எப்படி வணங்கினால் அருளாசி பெறலாம்? பவிஷ்ய புராணம் சொல்லும் சூரிய வழிபாடு!

Lord Sun Worship : மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணம் என்பது  மிகவும் முக்கியமானதாகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருளாகும். 

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே மனுவிற்கு  சூரிய பகவான் சொல்லும் விஷயங்களைப் பற்றி பவிஷ்ய புராணம் பேசுகிறது  

1 /8

சுப காரியங்களில் வரும் தடைகள் நீங்க, சூரியனை வழிபடுவது அவசியம். இந்து மதத்தில் சூரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இதைப் பற்றி புராணங்களில் பல குறிப்புகள் உள்ளன

2 /8

பவிஷ்ய புராணம் அனைத்து வேதங்களிலும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் இதற்கு முக்கிய இடம் உண்டு. ஒருவரது வாழ்க்கை தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் இந்தப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. 

3 /8

மனித வாழ்வில் ஏற்படக்கூடிய இடையூறுகளையும், தொல்லைகளையும் நீக்கும் பரிகாரங்கள் பவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன

4 /8

 பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ள சூரியன் தொடர்பான சில பரிகாரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். இந்து மதத்தில் உள்ள தெய்வங்களில் காணக்கூடிய வடிவில் இருக்கும் ஒரே கடவுள் சூரியக் கடவுள். இவரை மனதார வணங்கினால், வேண்டுதலை நிறைவேற்றுவார்

5 /8

காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, சூரியனை நோக்கி அதை அவருக்கு அர்க்கியம் செய்ய வேண்டும். இந்த தண்ணீரில் அரிசி மற்றும் பூக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அர்க்கியம் வழங்கும் போது சூரியனுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்கலாம். இது, உடல் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்

6 /8

சூரியனின் அருளைப் பெற, மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஆடைகள், மாணிக்கம், கோதுமை, வெல்லம், செம்பு பாத்திரம் மற்றும் சிவப்பு சந்தனம் போன்றவற்றை தானம் செய்யுங்கள்.

7 /8

சூரிய தோஷம் நீங்க ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது நல்லது. இதனால் ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுப்பெறும்.

8 /8

மகிழ்ச்சியும், செழிப்பும் எப்போதும் நீடிக்க வேண்டுமானால் சூரிய வழிபாடு முக்கியமானதாகும்.  அதிலும், சூரியப் பெயர்ச்சி நாளன்று சூரியனை வணங்குவது மிகவும் நல்லது, சமூகத்தில் நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கும்